Thamizharuvi 2004/05

Thamizharuvi-2004/05

தமிழருவி 2004 /05

இதழாசிரியர் – சிவானந்தன் . ச

அன்புள்ள வாசகர்களே!
வஞ்சனை செய்த கடல்
மனிதன் ஒரு சிறப்பு விலங்கு
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணம்; – கன்ரபரி தமிழ் சங்கம்
பனை மரத்தின் மகிமை
என்னைத் தெரிகிறதா?
எம் ஈழப் போரின் வரலாற்றுப் பாதையிலே.
நமது சாப்பாட்டை மறக்கமுடியுமா?
The declaration of Independence of New Zealand – 28 Oct 1835.
ஆமையும் முயலும் இ பொம்மை
“என்னைத் தாலாட்ட வருவானா?”
How can the weight of Earth be determined?
Treaty of Waitangi.
இதற்குத்தானா ஆசைப்பட்டாய்?
Water or Coke?
சிறுவர் கதைகள்
ஈழப் போரும் இயற்கைப் போரும
கணனி வைரஸ

 

அன்புள்ள வாசகர்களே!

தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவ வேண்டுமென்ற உயரிய நோக்கில் செயற்படும் “ கன்ரபரி ” தமிழ் நெஞ்சங்களின் ஆக்கங்களைச் சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். உருவத்தில் சிறிதாயினும் உணர்வில் உயர்ந்ததாக அமையும் எமது முயற்சி மென் மேலும் வளர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு மெருகூட்டும் வண்ணம் இம்மலர் புத்தகமாக மட்டுமன்றி “ சுனாமி ” ஆழிப் பேரலைகளின் அனர்த்தத்தினால் ஏற்பட்ட பேரழிவுகளைக் காட்டும் மென் தட்டும் வெளிவருகின்றது.

பல்வேறு காரணங்கள் நோக்கங்களுடன் கடல் கடந்து இப்பிரதேசத்தில் வாழும் அன்பு நெஞ்சங்களின் தாய்மொழி, கலாச்சாரப் பற்றுக்கள் அழியாது தொடரும் வண்ணம், தமது சிறார்களுக்கு ஊட்ட எடுக்கும் முயற்சிகளைக் காணும் போது எமது உள்ளம் புளகாங்கிதமடைகின்றது. இது மென்மேலும் வளர எமது வாழ்த்துக்கள்.

எதிர்பாராத “ சுனாமி ” பேரலைகளின் அனர்த்தத்தினால் உயிர்கள் உடமைகளை இழந்து பரிதவித்து நிற்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து அவர்களின் துயரத்தில் பங்கு கொள்வதுடன் அவர்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இம்மலரை அழகாகவும் சிறப்பாகவும் சீக்கிரமாகவும் வெளியிட உதவிய அனைவருக்கும் விசேடமாக திருமதி மைதிலி நல்லைலிங்கம், திரு பே கணேசமூர்த்தி திருமதி எமா ரேமன்ட் அவர்களுக்கும் எனது உள்ளங் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

ச. சிவானந்தன்

இதழ் ஆசிரியர்

 

வஞ்சனை செய்த கடல் – மேகலா றஞ்சித்குமார்
1.

வஞ்சனை செய்த கடல் கண்டால் – நான்
விளையாடப் போகமாட்டேன் பாப்பா
நெஞ்சு வலிக்கிறது பாப்பா
எங்கள் நேச உறவுகளை நினைந்தால்

உண்ண உணவும் இல்லை அவர்க்கு
உறைய இடமும் இல்லை பாப்பா
கண்கள் பனிக்கிறது பாப்பா
அந்தச் சின்னஞ் சிறுவர்களை நினைத்தால்

என்ன தரமுடியும் எம்மால் அவர்
துயரம் துடைப்பதற்கு பாப்பா
எந்தன் உடைகளிலே பாதி இருக்கும் உணவுகளில் பாதி
சின்ன உண்டியல் காசு இவை அனைத்தும் அனுப்புகிறோம் பாப்பா

 

2.

என்னைப் போன்ற சின்னப் பிள்ளைகளை
அள்ளிச் சென்ற கடலே
உன்னைப் பார்க்கவும்
உன்னில் நனையவும் இனி
ஆசையில்லை எனக்கு.

உன்னோடு கா

 

பனை மரத்தின் மகிமை

யாழ்ப்பாணம் என்றால் பனை வளம் என்று கூறலாம்.

பனை மரத்தில் இருந்து பல பயன்களை நாம் பெற்றோம், பெற்றுக்கொண்டே இருக்கிறோம்.

பனையிலிருந்து பல உணவுவகைகளை தயாரிக்கலாம். பனம் பழத்திலிருந்து பனங்காய் பணியாரம் தயாரிக்கலாம். இதனை நான் எனது அப்பம்மா வீட்டிற்கு விடுமுறையிற் சென்ற போது தயாரித்து உண்டு, அதன் சுவையினை என்றும் மறக்கமுடியாது.

பனங்கிழங்கு மிகவும் சுவையானது. புழுக்கொடியலை இங்கும் நாம் காணலாம். ஓடியல் மாவில் கூழ் காய்ச்சி மக்கள் ஒன்றுகூடி அருந்துவோம். இலங்கை சென்று வருபவர்கள் இங்கும் ஒடியல் மாவினைக் கொண்டுவந்து கூழ் காய்ச்சி மகிழ்வார்கள்.

பனங்குட்டான் மிகவும் சுவையானது. இதில் பல பருமன்கள் உள்ளது. நான் நல்லூர் திருவிழாவில் வாங்குவேன். மிகவும் சிறிய குட்டான் மிகவும் அழகானது. இதனை பிட்டுடன் சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

பனங்கள்ளு மிகவும் சுவையானது என்று சொல்லுவார்கள். இதனை நான் சுவைக்கவில்லை ஏனெனில் நான் இலங்கையில் வசிக்கும் பொழுது அதனை சுவைக்கும் பருவத்தில் நான் இல்லை.

பனை மரத்தில் வீடு கட்டுபவர்கள் அத்துடன் கிணற்றுக்கு துலா செய்து போடுவார்கள். ஏனெனில் அது மிகவும் வைரமானது, நீண்ட காலம் பாவிக்கும்.

பனை ஓலையிலிருந்து பலவிதமான கைப்பணிப் பொருட்களை தயாரிப்பார்கள். பாய், கடகம், ஓலைப் பைகள். இவற்றிற்கு வர்ணம் பூசி பல நிறங்களில் காணலாம்.

இங்கு பல நியூசிலாந்து பெண்களும் ஆண்களும் ஓலைப் பைகளை அழகாகக் கொண்டு செல்வதைக் காணலாம். ஆனால் நம் நாட்டில் ஓலைப் பைகளைக் கொண்டு செல்வது நாகரீகம் அல்ல என்று நினைப்பார்கள்.

நி~hன்.
(Nishaaharan Easwarapadcham)

 

எல்லோரும் (?!) கொடுத்த ஊக்கத்தாலே, அட! நமக்கும் எழுத வருதேன்னு, நினைச்சிகிட்டு இதை அனுப்பறேன். அடிக்க வந்துறாதீங்க!

எண்றும் அன்புடன்,

துளசியக்கா

“என்னைத் தாலாட்ட வருவானா?”
தூக்கம் வராதவங்கதான் தூக்கத்தைப் பற்றிப் புலம்பிக்கீட்டிருப்பாங்க. ஒரு காலத்துலே, கல்லூரி விடுதியிலே என் அறைத் தோழி சொல்வாள் “தூக்கம்தான் மனுஷ வாழ்க்கையிலே மிகவும் இன்பமான பகுதி, அதைக் கெடுக்காதே’ என்று சொல்லிவிட்டு, நாங்கள் தரும் காப்பியைக் கண்களை மூடியபடியே குடித்துவிட்டு, மறுபடியும் தூங்கிவிடுவாள். ஒரு மாதிரி கலரில் இருக்கும் வென்னீரைத்தான், எங்க விடுதியிலே காப்பின்னு சொல்லிகிட்டிருந்தாங்க. தவிர, விடுதியின் சமையலறையில் என்ன நடக்குதுன்னு அந்த வயதில் யாருக்கு அக்கறை இருந்திருக்கும்?

இப்ப, இந்தவயசிலே, தூக்கம் வராம ராத்திரி முழுசும் புரள்றப்பதானே தூக்கத்தின அருமை தெரியுது. ஆனா ஜனங்களைத் தூங்க வைக்கறதிலே கில்லாடின்னா ‘மொரிட்ஷியோ’ வைத்தான் சொல்லணும்.

1999-லே, நாங்க, குடும்பத்துடன் (குடும்பம்னா அளவான குடும்பம், நான், என் கணவர் அப்புறம் என் 16 வயது மகள்) ஐரோப்பாவைச் சுற்றிப்பார்க்கும் ஆவலில் ஒரு சுற்றுப் பயணம் போனோம்.

‘காஸ்மொஸ்’ என்னும் நிறுவனத்தின் 19 நாட்கள் சுற்றுலா. அவர்கள் பலவிதமான வகைகள்

வைத்திருக்கின்றனர். ஆனால், நம்முடைய ‘ஐவேஜ்’ க்குக் கிடைத்தது இந்த 19 நாள்தான்.

முதல் நாள், லண்டனில் ஒரு ஹோட்டலில் இருந்து ஒரு சாதாரண ‘பஸ்’ஸில் ‘டோவர்’ வரை வந்து, அங்கிருந்து ஒரு கப்பல ஃபெர்ரி மூலம் ஃப்ரான்ஸ் நாட்டுக்கு வந்தோம். எங்கள் குழுவிலே

மொத்தம் 35 பேர். ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னென்னா, அதுலே 21 பேர் இந்தியர்கள். அதுவும் பல ஊர்களில் இருந்து வந்திருந்தோம். என்னவோ தெரியலே, யாரும், மற்ற யாரோடும் பேசாம அவுங்கவுங்க குடும்பத்தினருடன் மட்டும் பேசிக்கிட்டிருந்தாங்க.

ஃப்ரான்ஸ்-லே, வழக்கம்போல பாஸ்போர்ட், மற்ற எல்லாவிதமான பரிசோதனைகளும் முடிஞ்சது. வெளியே வந்து பார்த்தா, ஒரு அட்டகாசமான ‘சொகுஸ{ பஸ்’ எங்களுக்காக காத்திருந்தது.

லண்டனிலிருந்து எங்களோடு வந்திருந்த வழிகாட்டி, எங்களையெல்லாம், மற்றொரு வழிகாட்டிகிட்டே ஒப்படைச்சிட்டுப் போயிட்டார். பஸ் புறப்பட்டுச்சு. நாங்கெல்லாம் வழியெல்லாம்

வேடிக்கைப் பார்த்துக்கிட்டே ‘பெல்ஜியம்’ நாட்டில், ‘ப்ரஸல்ஸ்’ வந்து சேர்ந்தோம். இந்த ஒரு

நாட்டில்தான், ‘ஹைவே’ முழுவதும் மின்சாரக் கம்பங்களில் விளக்கும் போட்டிருக்காங்க. அது எரியவும் செய்யுது.

மறுநாள் காலை ஏழரை மணிக்குள் எல்லோரும் தயாராகணும். இந்த மாதிரி சுற்றுலாக்களில்

தினமும், காலை உணவு நாம் தங்கியுள்ள ஹோட்டலிலேயே கிடைக்கும். தினமும்,’ப்ரேக்ஃபாஸ்ட், சில இடங்களில் டின்னெர்’ என்று நம்முடைய மொத்த சுற்றுலா பயணத்திற்கும் சேர்த்துத்தான், நாம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். காலை 7 மணிக்குமுன் நம் அறை வாசலில், நம் பெட்டிகளை வச்சிடணும். அப்புறம் காலை உணவு. அது முடிந்ததும் நேரா ‘பஸ்’ தான்.

‘டைனிங் ரூம்’ போய்ப் பார்த்தால், அமர்க்களமான ‘ப்ரேக்ஃபாஸ்ட், எங்களுடைய ஃபேவரிட்’ டான ‘க்ரசாண்ட்’ கூட இருக்கு. ஹையாஆஆஆஆஆ…’க்ரசாண்ட்’ இது முதல் நாள். அப்புறம் சில நாட்களில் அது ‘ஐயோ..ஓஓஓஓஓஓஓஓஓஓஓ..’க்ரசாண்ட்’ஆகிவிட்டது. நொந்து நூடுல்ஸ்

ஆன கதைதான்.

இந்த 19 நாட்களில் 7 நாடுகளைச் சுற்றினோம். ஆனா சொல்லிவச்ச மாதிரி எல்லா இடத்திலும்ஒரே மாதிரியான காலை உணவு. ஹ_ம்….ஒரு நாள் இட்டிலி, ஒரு நாள் தோசை, ஒரு நாள் பூரின்னு கிடைச்சிருக்கக்கூடாதான்னு மனசு ஏங்கிடுச்சு. எப்படியும் சென்னை வழியாதானே நியூஸிலாந்து திரும்பப் போறோம். அப்பப் பாத்துக்கலாம்னு இருந்தோம். சொன்னா நம்பமாட்டீங்க! திரும்பி வந்தவுடன், 2 வருஷத்துக்கு ‘சூப்பர் மார்கெட்’லே ‘க்ரசாண்ட்’ இருந்த பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கலே!

பாத்தீங்களா? சொல்ல வந்த சமாச்சாரத்தை வீட்டுட்டு எங்கியோ பாய்கிட்டு இருக்கேன். அது போகட்டும். தினமும் ‘பஸ்’லே ஏறுன அஞ்சாவது நிமிஷம் எல்லோருக்கும், (எல்லோருக்கும்னா சின்ன பசங்கள் உட்பட எல்லோருக்கும்) கண்ணு ஒட்டிக்கும். இமைகளைப் பிசினு போட்டு ஒட்டினமாதிரி, திறக்கவே முடியாதபடி. கண்டிப்பா வேடிக்கைப் பார்த்துகிட்டு போகணும்னு நினைக்கறவங்கதான் இந்த அஞ்சு நிமிஷம் தாக்குப்பிடிக்கிறவுங்க. மத்தவுங்க? ரெண்டாவது

நிமிஷமே காலி. முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டுட்டேன் பாருங்க! நம்ம பஸ்

ட்ரைவர் தான் ‘ மொரிட்ஷியோ’. அலுங்காமக் குலுங்காம வண்டி ஓட்டறதுலே மன்னன்.

எல்லோரும் தூங்கிகிட்டே போவோமா, அப்ப ஏதாவது நம்மளை மாதிரி சுற்றுலா ஆளுங்க பார்க்க வேண்டிய இடம் வருதுன்னு வச்சிகுங்க, உடனே ‘மைக்’லே கரகரன்னு ஒரு சத்தம் லேசா காதுலே விழும்.’

வேக்கி, வேக்கி, வேக்கி’ன்னு, நம்ம கைடு வுடற சவுண்டு. ரொம்பக் கஷ்டத்தோட கண்ணைத் திறப்போம். அவரு, நாங்க பார்க்கபோற இடத்தைப் பற்றி ஒரு விளக்கம் சொல்வார். பஸ் நிக்கும். எல்லோரும் ஒரு உற்சாகத்தோட கீழே குதிச்சு இறங்குவோம். தூக்கம்? ‘போயே போச்’, ‘போயிந்தி’, ‘இட்ஸ் கான்’

திரும்பி பஸ்ஸ{க்குள்ள வரவேண்டியதுதான். மந்திரம் போட்ட மாதிரி, கண்ணு மேலே சொருகிடும். இதே கதைதான் 18 நாளும். ஒரு வித்தியாசமும் இல்லை. நம்ம கைடுக்கே ஒரு தடவ வெறுத்துப் போச்சுன்னு நினைக்கிறேன். இத்தாலியில், ஒரு பாதையில் நிறைய ‘டன்னல்’வரும். அது மொத்தம் எத்தனைன்னு சொன்னா ஒரு பரிசு தரேன்னு சொன்னார். நானும் ரொம்பக் கஷ்டப்பட்டு, எண்ணிக்கிட்டே வந்தேன்.

இருவது, இருவத்தொன்னு, இருவத்திரண்டு…… யாருக்கு வேணும் அந்தப் பரிசு ?

அப்புறம் ‘முழிச்சிகிட்ட பிறகு. கைடே சொன்னாரு அறுவத்தொம்பதுன்னு. அப்பாடா…நல்லவேளை

தூங்கிட்டோம்.

கடைசி நாள், எங்களையெல்லாம் ‘யூரோ டன்னல்’ கிட்டே கொண்டுவந்து விட்டப்ப, ஐயோ, இனி தூங்கறதுக்குத் தாலாட்ட ‘மொரிட்ஷியோ’ இல்லையேன்றதுதான் ஒரே வருத்தமா இருந்தது.

அப்பனே, ‘மொரிட்ஷியோ’ இப்ப எங்க ஐயா இருக்கே? தூக்கம் வராம பொரளறேனே! வந்து தாலாட்டக் கூடாதா?

எம் ஈழப் போரின் வரலாற்றுப் பாதையிலே

வாழ்க எம் தலைவா
தமிழ் மானம் காக்கும் எங்கள் ஈழத்துத் தலைவரே
புகழ் யாவும் உமக்கு வானுயர்ந்த சோலைகளே – மன்னா
மக்கட்கு மதிநுட்பமாய் ஈழத்தின் விடியலை காட்டும் மாவீரா
திக்கெட்டும் உன்பணி பரவ வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

எமது தாயகமான ஈழத்தை சிங்கள இனவெறி பிடித்த சீருடை அணிந்த காடையர்களிடம் இருந்து காப்பாற்றும் பணியில் புனிதப்போர் தொடுத்து தங்களின் விலை மதிக்க முடியாத உயிர்களைத் தியாகம் செய்த எம் உடன் பிறவாச் சகோதரர்களுக்கு அகரவரிசையில் அஞ்சலி சமர்ப்பணம.;

 

அ ல்லும் பகலும் அயராது போராடி தமிழ் மண்ணைக் காத்து
ஆ தரவு பல நல்கி கண்ணியமாய் கடமை பல செய்து
இ ல்லறத்தின் இனிமைதனைச் துச்சமென மதித்து
ஈ விரக்கம் கொண்ட எம் தன்மானத் தமிழ் வீரர்களே
உ ற்ற தோளர்களாய் மேடு பள்ளம் பல தாண்டி
ஊ ர் உலகம் புகளும் தரம் மிக்க போராழிகளாய்
ஏ த்தனை இடர்கள் வந்த போதும் நடைதளராது பொழுதெல்லாம் நின்று
ஏ றுபோல் வீறுநடை போட்ட எம் வீரத்தியாகிகளே
ஜ யோ என்ற அலறல் ஏதும் இன்றி மருணித்தீர்களே
ஒ வ்வொரு பொழுதும் உமை எல்லாம் நினைந்து தவிக்கின்றோம்
ஓ வென்று கதறுகிறோம் பாரெங்கும் நாமெல்லாம்

ஏதிரிகளை தேடுகையில
காடு வெட்டி கரவு வெட்டி
காலமெல்லாம் விளித்திருந்து
கூட்டம் போட்டு நோட்டம் விட்டு
கால் வலிக்க நடை நடந்து
காடு மேடு பள்ளம் தாண்டி
கண்ணி வைத்து ஆமி அடடித்த
எம் அன்புத் தோழர்களே
மாவீரர்களே எங்கே சென்றீர்கள்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ஈழம்

பே-கணேவமூர்த்தி

 

நமது சாப்பாட்டை மறக்கமுடியுமா?

நான் எனது பாடசாலை விடுமுறையில் ஒரு நாள் எனது அம்மா, அப்பா, அண்ணாவுடன் வெளியில் சௌ;று உணவு உண்ண உத்தேசித்தேன். எப்பொழுதும் Pizza, Mc Donalds, KFC சென்று சுகமாக சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டோம். இந்த முறை வாங்கிவந்து, வீட்டில் சாப்பிடுவதை விட வெளியில் சென்று சாப்பாட்டுக் கடையில் இருந்து சாப்பிடுவதுதான் முக்கிய நோக்கமாக இருந்தது.

எனது அப்பா சொன்னார் எங்களுடைய சாப்பாடுகள் இருக்கும் கடைக்குச் செல்வோம் என்று எனவே எல்லோருமாக ஒரு இந்திய சாப்பாட்டுக் கடைக்குச் சென்றோம். சென்றுதும் உணவு பரிமாறுபவர் எங்களிடம் வந்து என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்டார். உடனே என் அப்பா தோசை, இட்லி எனத் தொடங்கி நாம் அன்றாடம் சாப்பிடும் சாப்பாட்டைக் கேட்டார். அப்பொழுது உணவு பரிமாறுபவர் “Menu card” ஐக் கொடுத்து இவைதான் இருக்கிறது என்றார்.

நான் “Menu card” இல் இருந்த உணவில் சில “Chicken” உணவுகளைத் தரும்படி கேட்டேன். அவர் பின் அவற்றைத் தந்தார். நூம் நன்றாக உண்டு மகிழ்ந்தோம்.

இறுதியாக எனது அப்பா பாயாசம் பரிமாறுவார்கள் என்று தனது பண்பாட்டை மறக்காமல், கோழி உணவு சாப்பிட்டதையும் மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

நியூசிலாந்தில் அதுவும் “Christchurch” இல் தமிழ் மக்கள் பெரும்பாலாக இருந்தால் அல்லவா உமது உணவும் பாயாசமும் சாப்பாட்டுக் கடைகளில் திடீர் என்று தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

உமே~;;

 

மனிதன் ஒரு சிறப்பு விலங்கு

மனிதன் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் மனித நாகரிக வளர்ச்சி இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. விலங்குகள் என்ற பிரிவின் கீழ் வரும் மனிதன,; ஒரு சிறப்பு விலங்கு என்று கணிக்கப்பட்டு இருக்கிறான். ஆறாவது அறிவான பகுத்தறிவைக் கொண்டிருந்தும், இப்பகுத்தறிவு மனிதனுக்கு மனிதன் ஒரேயளவானதா என்பது ஒரு கேள்விக்குறியே. சுயசிந்தனை என்பது எல்லோருக்கும் ஒரேயளவாக இருப்பதில்லை. எமது நாளாந்த வாழ்க்கையில் வீட்டிலும், சமூகத்திலும் நாம் பகுத்தறிவையும், சுயசிந்தனையையும் எவ்வாறு பாவிக்கிறோம் என்பது ஒவ்வொரு மனிதனையும் வேறுபடுத்துகிறது. “கல்வி இல்லையேல் வாழ்க்கை இல்லை” என்ற வாசகத்தை இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களுக்கு அண்மையில் யான் விஜயம் செய்தபோது அடிக்கடி காணக்கூடியதாக இருந்தது. கல்வி அறிவு மக்களுக்கு அத்தியாவசியமானது. ஒரு சமுதாயத்தில் படிப்பறிவு குறைந்தவர்கள் கதைக்கும்போது அவர்கள் தங்கள் கருத்தை செவ்வனே சொல்லத் தெரியாமல் தமது இயலாமையால் வாயில் வருவதைக் கதைத்து, தரக்குறைவாக பொது இடங்களில் நடந்து சமுதாயத்திற்கு தம்மை அடையாளம் காட்டிவிடுகிறார்கள். இதனைத் திருவள்ளுவர் மிகவும் அழகாக இரண்டி அடிகளில் கூறுகிறார்

“யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல் இழுக்கப்பட்டு”

சில சமயங்களில் ஒரு சிலர் தமது பிழையை உணர்வார்கள். ஒரு சிலருக்கு அவற்றை உணரக்கூடிய அளவிற்கு சுயசிந்தனை இருக்காது. தொடர்ந்தும் அதே பிழைகளைச் சர்வசாதரணமாகச் செய்வார்கள். இதைப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மிகவும் அழகாக வீணரின் வீண் பேச்சு தொடரும் எனக்கூறுகிறார். இச்சந்தர்ப்பத்தில் படித்தவர்கள் எலலோரும் பண்பாகத் தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துகிறார்களா என்ற கேள்விக்கு பதில் இல்லை என்பதே. ஒருதடவை காலம் சென்ற முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களைச் சந்திக்கச் சென்றவர்களுக்கு கூறியதை நினைவு கூரலாம். ஜ அவர்; குரல்வளம் பாதிக்கப்பட்டு இருந்த காலத்தில் இச்சம்பவம் நடந்தது. ஸ எம்.ஜி.ஆர் சொன்னார் ” உங்களுக்குப் பைப்பிருக்கு பம்பில்லை” என்று. வந்தவர்கள் “ஜயா நாங்கள் காவிரி ஆற்றுப்பிரச்சனை பற்றிக் கதைக்க வரவில்லை” என்றார்கள். திரும்பவும் எம்.ஜி.ஆர் முன்பு சொன்னதையே திருப்பச்சொன்னார். அங்கு சென்றவர்கள் ஆளை ஆள் பார்த்தார்கள். அப்போது அங்கே எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உதவியாக இருந்தவர் சொன்னார் ஜயா என்ன சொல்லுகிறார் என்றால் உங்களுக்குப் “படிப்பிருக்கிறதாம் ஆனால் பண்பில்லையாம்” என்றார். படிப்பிருந்தும் பண்பில்லாமல் நடப்பவர்கள் யார்? அரைகுறைப் படிப்பாளிகள்.

ஒருமுறை இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றின் மூதவைக் கூட்டத்தில் (ளுநயெவந ஆநநவiபெ) மூத்த உறுப்பினர் கலாநிதி இராமகிருஸ்ணன் கூறினார், “இங்கு நான் பல வருடமாகப் பார்க்கிறேன், சிலர் மூதவைக்கு வருகிறார்கள் ஆனால் அவர்கள் வாய் திறந்து தமது கருத்துக்களைக் கூறியதை காணவில்லை. ஆனால் அவர்கள் வாய் திறப்பது எப்போது என்றால் அந்த மூதவையில் கொடுக்கப்படுகின்ற வடையையும், வாழைப்பழத்தையும் சாப்பிடுவதற்குத்தான்” என்று ஒரு போடு போட்டார். அதே நேரம் சிலர் வாயைத் திறக்காமல் இருப்பது நல்லது என்பதற்குப் பல சந்தர்ப்பங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நன்றாகப் படித்த வயதில் பழுத்த பழங்களே வாயைத்திறந்து தமது சாயத்தைக் கழட்டி விடுகிறார்கள்.

மேலும் மனிதப்பண்புகளுக்கு சவாலாக நடந்த சில அண்மைச் சமபவங்கள் எனது நினைவில் வருகிறது. இயற்கையின் மாறுதலினால் ஏற்பட்ட கடலின் பெரும் சீற்றத்தின்; (வுளரயெஅi) பேரழிவின் பின் கிழக்குப் பிரதேசத்தில் சடலங்கள் கடற்கரையில் வந்தொதுங்கும் சமயத்தில் குடும்பத்தினர,; உற்றார் உறவினர்கள் தம் சொந்த இரத்தங்களை தேடும் நேரத்தில் ஒரு சிலர் இறந்த பெண்கள் மீது அக்கா போய்விட்டியே என்று விழுந்து அழுதார்கள், சிறுவர்கள் மேல் தம்பி தங்கைச்சி போய்விட்டியே என்று விழுந்து அழுதுவிட்டு, ஆட்கள் அங்கும் இங்கும் நகரும் சமயம்; பார்த்து நைசாக அவர்கள் காதைக் கத்தியால் அறுத்து நகை பொறுக்கிய ம(h)க்களும் ! இருக்கிறார்கள். தென்பிரதேசத்தில் கடற்பேரழிவில் சிக்கி உயிர்தப்பிய இளம் யுவதியை அச்சம்பவம் நடந்த குறுகிய நேரத்தில் பல ஆடவர்கள் சென்று பலாத்காரம் செய்ததை உள்நாட்டுச் செய்தித்தாபனஙகள்; மாத்திரமின்றி பல வெளிநாடடுச் செய்தித்தாபனங்களும் பெரும்திரை போட்டுக்காட்டியதை யாவரும் அறிந்ததே. மனிதனின் வக்கிர புத்தியை இச்சம்பவம் காட்டுகிறது. ஒரு பெண்ணை பலாத்காரமுறையில் அடைவதற்கு பலவிதமாக முயற்சிப்பவர்களை இந்நாகரிக உலகினிலும் கண்கூடாகக் காணலாம். மேலும வுளரயெஅi ன் பின்பு அனாதைகளாக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தகளை பணத்திற்கு விற்ற சம்பவங்களும் மனிதரின் கொடூர உணர்வுகளைத் தெளிவாகக் காடடுகிறது.

யான் கடந்த தைமாதம் இலங்கையின் வடக்குப் பிரதேசத்திற்குச் சென்ற போது, ஒருவர் சொன்னார் “நான் மூன்று தடவைகள் இடப்பெயர்வுக்குப்பின் தற்போது ஒரு கிடுகுக் கொட்டிலில் வாழ்க்கையை ஓரளவு நிம்மதியாக நடத்திக்கொண்டிருக்கிறேன் ” . ஆனால் இந்த வுளரயெஅi ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றும் இல்லை என்று; ஆதங்கப்பட்டார். ஆண்டவன் வுளரயெஅi வடிவில் வந்து பெருந்தீமையுடன் சில நன்மைகளையும் செய்திருக்கிறான் என்றார். என்ன சொல்கிறீர்கள் !! என்று நான் கேட்டதற்கு அவர் “உள்நாட்டில் இருக்கும் நாம் ஒவ்வொரு நாளும் போர் முழக்கத்திற்கு நாட்களை எண்ணிக்கொண்டு இருந்தோம். ஆனால் இப்ப அந்த நிலை தற்போதைக்கு வராது என்ற நம்பிக்கையுடன் கூடிய ஒரு நிம்மதிதான் “என்று பதிலளித்தார். போர் முழங்கினால் எனது குடும்பம் நாலாவது தடவை இடம் பெயர்வதற்கு தயாராகவேண்டும் என்றும் கூறினார். இந்தக்கருத்து தமிழ் பிரதேசமெங்கும் பரந்துபடடு உள்ளது.

ஆண்டவன் வுளரயெஅi வடிவில் வந்தார் என்று கூறிய விடயம் என்னைச் சிந்திக்கவைத்தது. எத்தனை லடசம் மக்கள் அழிந்தும் ஒருவருக்கும் எதிராக வழக்கில்லை. ஏன் கொனறாய்?…. எப்படிக் கொன்றாய்?….என்ற கேள்வி இல்லை. இயற்கை என்ற அதிவேக வலிமைக்கு (ளுரிநச Pழறநச) எதிராக யாரால் வழக்கு வைக்க முடியும். இதனால்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனிதரகள்; இயற்கைச் சக்திகளான நீர,; நெருப்பு, காற்று, சூரியன் போன்றவற்றை தெய்வங்களாக வழிபட்டனரோ? உலகத்தில் மனிதன் வாழும் எப்பிரதேசத்தில் கடந்த இரண்டாயிரம் ஆண்டு காலப்பகுதியில் போர் நடைபெறவில்லை? மண்ணாசை மனித வரக்;கத்தை விலங்குகளாக்கி மனித நிம்மதியையும், உலகஅமைதியையும் இல்லாமலாக்கி அர்த்தமில்லாத மனிதப் பிறப்பை மக்களிடையே ஏற்படுத்தியது. இதனால்தான் உலகம் முழுவதும் பல இயற்கை அழிவுகளோ?

மேலும் இன்று மனிதன் மதவெறி, இனவெறி என்ற கோரப்பிடியில் சிக்கி தாண்டவம் ஆடுகிறான். மதம் என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி. இது மனிதர்களுக்கு அமைதியை கொடுத்து கடடுக்கோப்பான சமுதாயங்களை உருவாக்குவதற்கு ஏதுவாகின்றது. ஆனால் இன்று மதங்களோ மக்களை அழிக்கிறது. இனவெறி உலகத்தை உலுப்புகிறது. விலங்குகளுக்கு மதமில்லை. அவைகள் மதவெறி அழிவிலிருந்து தப்பிவிட்டன. இனவெறி பிரச்சாரத்தில் இருந்தும் தப்பிவிட்டன. இன்று சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை. நாட்டில் அமைதி இல்லை, உலகில் சமாதானம் இல்லை, இவை யாவற்றிற்கும் காரணம் என்னவென்று கேட்டால் நாம் நாகரிகம் அடைந்து விட்டோம் என்று கூறிக்கொள்ளும் மனிதவர்க்கமே. சமுதாயத்தின் மனிதக் கிருமிகளே இன்று பலவடிவில் உலக அழிவிற்குக் காரணமாகிறார்கள். உண்மையில் மனிதன் ஒரு சிறப்பு விலங்கா? அல்லது சிரிப்பிற்கு இடமான விலங்கா?

கலாநிதி செந்தி செந்தில்மோகன்

Christchurch, New Zealand.

 

ஈழப் போரும் இயற்கைப் போரும்

அ ல்லும் பகலும் அயராது போராடி தமிழ் மண்ணைக் காத்து

ஆ தரவு பல நல்கி கண்ணியமாய் கடமை பல செய்து

இ ல்லறத்தின் இனிமைதனைச் துச்சமென மதித்து

ஈ விரக்கம் கொண்ட எம் தன்மானத் தமிழ் வீரர்களே

உ ற்ற தோளர்களாய் மேடு பள்ளம் பல தாண்டி

ஊ ர் உலகம் புகழும் தரம் மிக்க போராளிகளாய்

எ த்தனை இடர்கள் வரினும்; நடைதளராது பொழுதெல்லாம் நின்று

ஏ றுபோல் வீறுநடை போட்ட எம் வீரத்தியாகிகளே

ஜ யோ என்ற அலறல் ஏதும் இன்றி மருணித்தீர்களே

ஒ வ்வொரு பொழுதும் உமையெல்லாம்; நினைந்து தவிக்கின்றோம்

ஓ வென்று கதறுகிறோம் பாரெங்கும் நாமெல்லாம்

கண்ணீர் சிந்தி கவலை கொண்ட நம் தீவை

கடலின் சீற்றம் இரட்டிப்பாக்கியதோ

மண்ணை இழந்தோம் மணம் வீசும் மழலைகளை இழந்தோம்

பெண்களை இழந்தோம் பேரறிஞர்களை இழந்தோம்

சொந்தங்கள் பலரை இழந்தோம் நாம் சோகத்தைத் தளுவினோம்

அழிவுகளையும் அல்லல்களையும் கண்டோம் ஆறாத்துயரடைந்தோம்

விதியைத் தடுக்க முடியவுமில்லை வேதனைகளை மாற்ற வழியுமில்லை

இடர்கள் எமக்குக் குறையாதோ இதயத்தில் இன்பம் பொங்காதோ

பொறுமைக்கடலே பூமாதேவி எம்மை இனியும் வதைப்பாயோ

இறைவா எம்மைப் பாராயோ எமக்கு வாழ்வு தாராயோ.

ஆண்டவன்; ஒருவனே இன்பத்தையும் துன்பத்தையும் தருபவன். அழுதாலும் தொழுதாலும் அவனின்றி ஓரணுவும் அசையாது. நாம் இன்றைய வாழ்க்கையை மட்டும்தான் சிந்திக்கின்றோம். ஆனால் இறைவனோ எங்களது நேற்றைய வாழ்க்கையையும், நாளைய வாழ்க்கையையும் மையமாக வைத்தே தீர்ப்பு எழுதுகிறான்;.

பே-கணேசமூர்த்தி

 

கணனி வைரஸ்

கணனி வைரஸ் என்பது ஓர் சிறிய pசழபசயஅ ஆகும். இது கணனியிலிருந்து கணனிக்கு மின்னஞ்சல் மூலமும் இணையதள மூலமும் மற்றும் ஊனு, கடழிpல மூலமும் பரவுகிறது. வைரஸ்களின் தொல்லை இன்று கணனி உலகை ஆட்டிப் படைக்கத் தொடங்கிவிட்டது. தற்போது பல்வேறு புதுப் புது வைரஸ்கள் நாள்தோறும் இணையதள வளர்ச்சி மூலம் உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் இன்று hardwares  ஐ இயங்க விடாமல் தடுக்கும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

உங்கள் கணனியில் வைரஸ்கள் பரவியிருப்பின், பின்வரும் மாற்றங்களில் ஒன்றோ அல்லது பலவோ நிகழலாம்.

கணனி மெதுவாக வேலை செய்தல்;.
கணனி அடிக்கடி freezes ஆதல்.
கணனியை இயக்கும்போது நீங்கள் பதியாத படங்கள் தோன்றல்.
அடிக்கடி error messages தோன்றல்.
• வித்தியாசமான beeping  அல்லது click  சத்தம் அல்லது நீங்கள் பாவித்துக்துக் கொண்டிருக்கும் program இற்கு சம்பந்தமில்லாத music  கேட்டல்.

சில files  ஐ திறக்கும்போது cannot open என message  வருதல்.
கணனியின் திகதியும் நேரமும் மாற்றப்பட்டிருத்தல்.
உங்கள் கணனியில் பரவிய வைரஸ்கள்; கணனியில் பதியப்பட்டுள்ள மின்னஞ்சல் விலாசங்களுக்கு உங்கள் பெயரில்

• சில தகவல்களை அனுப்பக்கூடும்.

• உங்கள் கணனியில் உள்ள கடைநள சிலவற்றை சேர்த்து அனுப்பக்கூடும்;.

Files  ஐ மாற்றியமைக்கக் கூடும்.

Files  ஐ பழுதாக்கக்; கூடும்.

• கணனியிலுள்ள operating system ஐ செயலிழக்க வைக்கவும் கூடும்.

கணனியிலுள்ள operating system ஐ வைரஸ் செயலிழக்கச் செய்திருந்தால் பொதுவாக format செய்து மீண்டும் operating system ஐ பதிவதன் மூலம் கணனியை இயங்க வைக்க முடியும். தற்போது format செய்தாலும் harddrive  விட்டகலாத வைரஸ்களும் உள்ளன. அவற்றை anti-virus software மூலம் அகற்ற வேண்டும்.

நீங்கள் இணையத்தைப் பாவிப்பவராக இருந்தால் கட்டாயம் உங்கள் கணனியில் ஓர் Anti-virus program ஐ பதிந்து வைத்து ஒவ்வொரு நாளும் update செய்வது மிகமிக அவசியம்.

சில Anti-Virus softwares

Norton

McAfee

AVG

சில புதிய வைரஸ்களின் பெயர்கள்:

WORM MYDOOM.BA

WORM INFORYOU.A

WORM MYDOOM.BD

WORM MYDOOM.BC

PE DERDERO.A

BKDR SURILA.A

Sober.K

தி.மோகன்