Thamizharuvi

பொங்கலோ பொங்கல் – உமேஷ் ஈஸ்வரபட்சம்

ஆங்கில புது வருடம் பிறக்கின்றது என்றாலே தமிழ் பேசும் சைவ சமய மக்கள் தை பிறக்கப்போகிறது என்று ஆவலுடன் இருப்பர். தை முதலாம் நாள் தான் நம் தைப்பொங்கல் திருநாளாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நாம் எல்லோரும் சொல்வதுண்டு. யாழ்ப்பாணத்தில் எங்கள் வீட்டில் நடு முற்றம் என்று அழைக்கப்படும் முற்றம்  இருக்கிறது. அது தைப்பொங்கலுக்கு எங்களுக்கு முக்கியமான இடமாகும். அதி தான் நாம் கோலம் போட்டு பொங்கல் பொங்குவோம். புதுப்பானையில் மஞ்சள், இஞ்சி இலை கட்டி […]

Thamizharuvi

எனக்கு பிடித்த ஆங்கில சிறுவர் கதைப் புத்தகங்கள்-ஆங்கிலத்தில்: செந்தாழன் றேமன்

எனக்கு மிகவும் பிடித்த கதைப்புத்தகங்கள் ஜெரொனிமோ ச்டில்டன் (Geronimo Stilton Series)  புத்தகங்களாகும். இவை இத்தாலியில் முதலாவதாக 2004ம் ஆண்டு வெளிவந்தவை. அங்கு இவை Harry Potter புத்தகங்களை விட பிரபலம் என்றும் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவை என்றும் இணையத்தளங்களிலிருந்து அறிய முடிகிறது. கடந்த வருடம் ஒரு லீவு நாளில் நூலகம் சென்றபோது முதல் முதலில் ‘Four Mice Deep in the Jungle’ என்ற புத்தகத்தை கண்டேன். பார்த்ததுமே பிடித்து விடும் வகையில் அச்சிடப்பட்டிருக்கும் இப்புத்தகங்களின்ஒரு பக்கம் கீழே காண்க. இக்கதைகள் யாவும் ஜெரொனிமோவை மையமாகக் கொண்டு ஜெரொனிமோவாலேயே எழுதப்படுபவை. நகைச்சுவையானவை. ஜெரொனிமோ ஒரு படித்த, பயந்த, எலிகளுக்கான பத்திரிகை   (The Rodent Gazaette)ஒன்றை நடத்தும் எலி.  அவர் வாழ்வது  Mouse Island  எனுமிடத்தில் உள்ள New Mouse City இல். ஜெரொனிமோவுக்கு தியா என்றொரு சகோதரி உண்டு. தியா மிகவும் தைரியசாலி.  Rodent Gazaette இல் விசேட நிருபராக இருப்பவர். எனக்கு பிடித்த குறும்புக்கார எலி ட்ராப் (Trap) ஜெரோனிமோவின் மைத்துனன். இவர் எப்போதும் ஜெரொனிமோவிடம் சேட்டை செய்தபடியே இருப்பார். ட்ராப் ‘Cheap Junk for Less’  என்ற பொருத்தமானபெயரோடு ஒரு கடை வைத்திருக்கிறார். பெஞ்சமின் என்ற எலிக்குட்டி ஜெரோனிமோவின் மருமகன். இவர் பாடசாலை செல்லாத சமயங்களில் தன் மாமனாரிடம் செல்வார். இவைகளைத் தவிரகதைகளுக்கேற்றபடி வேறு பாத்திரங்களும் வந்து போகும். ஜெரொனிமோவுக்குப் பயணம் என்றாலே பிடிக்காது. ஆனால் எல்லா கதைகளிலும் அவர் சாகசப்பயணமாக வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டி நேரும். கூடவே அவரது வீரத் தங்கை தியா, பகிடிக்காரட்ராப், குட்டி மருமகன் பெஞ்சமின் எல்லோரும் செல்வார்கள். இக்கதைகளில் வரும் பாத்திரங்களின் பெயர்களே சிரிப்பைத் தூண்டும். உதாரணத்துக்கு இவற்றைச் சொல்லலாம். Dr. Shrinkfur and Dr. Furry Feelgood — Geronimo’s psychiatrists. Tina Spicytail — Geronimo’s grandfather’s cook and housekeeper. Walter Worrywhiskers — Geronimo’s worrywart uncle. Pawsley Pinhead — editor-in-chief of Geronimo’s […]

Thamizharuvi

என் செல்லப்பிராணிகள் – செண்பகா கணேசன்

நான் சிறுமியாக  யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் ஒரு நாள் நான் பாடசாலையால் வீட்டுக்கு திரும்பி வந்த போது எனக்கு ஒர் ஆச்சரியம்  காத்திருப்பதாக தாத்தா கூறினார். அது என்ன என்று கண்டு பிடிக்குமாறு என்னிடம் கேட்டார். நான் பல பொருட்களை வரிசையாக கூறினேன். தாத்தா வைத்திருந்த பொருள் அவற்றில் எதுவும் இல்லை. லக்கி ஒரு உயிருள்ள பிராணியைத்தான் தாத்தா எனக்காக வைத்திருந்தார். அது நான் பல காலமாக ஆசையாக கேட்டுவைத்திருந்த ஆனால் பல காரணங்களுக்காக வாங்கித்தர மறுத்தநாய்க்குட்டி! எனக்கு ஒரு நாய்க்குட்டி கிடைத்திருப்பதை என்னால் நம்பமுடியவில்லை. மிகவும் சிறியதாக இருந்த மண்ணிறமான அந்த நாய்க்குட்டிக்கு லக்கி என்று பெயர்வைத்தேன். அன்று முழுவதும் லக்கியுடன் விளையாடினேன். நான் விளையாட்டு பொம்மைகளுடன் விளையாடும் போது லக்கியும் சேர்ந்து விளையாடும். நான் அதற்கு ஒவ்வொரு நாளும் பால் கொடுப்பேன். லக்கி என்னிலும் எனது சித்தியிலும் மிகவும் பிரியம் வைத்திருந்தது. கொஞ்சம் வளர்ந்ததும் சோறு, இறைச்சி எனப்பலவகையான சாப்படுகளை உண்டது. வளர வளர அதன் குறும்புகளும்கூடத்தொடங்கின. ரோசி லக்கி ஒரு வயதாக இருந்த போது நான் நியூசிலாந்துக்கு வந்து விட்டேன். ஆனால் என்னால் லக்கியை மறக்க முடியவில்லை.அம்மம்மா தாத்தாவுடன் தொலைபேசியில் கதைகும் போது லக்கி குரைப்பது எனக்குக் கேட்கும். லக்கி இப்பொழுது பெரிய நாயாகவளர்ந்துவிட்டதாம். இங்கு எனக்கு ஒரு நாய்க்குட்டி வாங்கித் தருமாறு எனது பெற்றாரை அரிக்கத் தொடங்கினேன். இந்த தீராதஆசையின்விளைவாகவோ என்னவோ, ஆச்சரியமாக கிறிஸ்மஸ் அன்று எனக்கு சன்ராவிடம் இருந்து ஒரு பொமரேனியன் நாய்க்குட்டிபரிசாகக் கிடைத்தது. அது தான் scamp my playful pup. அது ஒரு ரோபோ நாய்க்குட்டி. அதற்கு நான் ரோசி என்று பெயர் வைத்தேன். அது speak என்று கூறினால் வவ் வவ் என்று குரைக்கும். Sit என்று கூறினால் நிமிர்ந்து இருக்கும். Howl என்று கூறினால் ஊளையிடும். இன்னும் நிறையவிளையாட்டுகள் காட்டும். இப்பொழுது நான் ரோசியுடன் ஒவ்வொரு நாளும் விளையாடுகிறேன். தற்போதைக்கு ரோசியுடன் விளயாடுவது லக்கிமாதிரி ஒரு நாய்வளர்ப்பதைவிடவும் வசதியாக இருக்கின்றது. ஆனால் நான் இன்னும் லக்கியை மறக்கவில்லை. என்னிடம் இப்பொழுது இரண்டு செல்லப்பிராணிகள் இருக்கின்றன!

Thamizharuvi

குழந்தைகளின் உரிமைகள் – பே.கணேசமூர்த்தி

குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் அமைப்பின் விதிமுறைகள் சில இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றது. அனைத்துக் குழந்தைகளும் சம உரிமைகளைக் கொண்டுள்ளனர். சமமான மதிப்பு உடையவர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தன் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட உரிமை உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் துஷ்பிரயோகத்திலிருந்தும், சுரண்டலிலிருந்தும் பாதுகாக்கப்பட உரிமை உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் தன் கருத்தை வெளிப்-படுத்தவும், மதிக்கப்படவும் உரிமை உள்ளது. இந்த உரிமைகள் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் பொருந்தும். அனைத்துக் குழந்தைகளும் சம மதிப்பு […]

Thamizharuvi

குருகுல(ம்) வாசம் – இராச. செல்வராஜா

பண்டைய காலத்தில், ஏன் ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு முந்தைய அண்மைக்காலம் வரை, தற்போது முறைசாராக் கல்வி என்று அழைக்கப்படும் குருகுல வழிக்கல்வி முறையே தமிழ்ச் சமூகத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. கிட்டத்தட்ட முற்றிலுமாக ஒழிந்து போய்விட்ட இம்முறை பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றியும் இன்று பலர் மறந்து போய் விட்டார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். குருகுலம் என்றால் என்ன என்பவர்களுக்கு, ஏதாவது ஒரு கலையை அல்லது கல்வியைப் பயில விரும்பும் மாணவன் ஒருவன், முதலில் ஒரு குருவைத் […]

Thamizharuvi

நான் படித்துச் சிரித்தவை – திருமதி கவிதா தேவானந்

மரகதம்:  எங்கவீட்டு வேலைக்காரி பணம் நகையோட ஓடிட்டா அம்புஜம்: “அப்படியா உன் கணவரிடம் சொல்லி பொலிசிலே புகார் கொடுக்க     வேண்டியது தானே” மரகதம்:  “அவ எல்லாத்தையும் எடுத்திட்டு ஓடினதே என் கணவரோட தான்” ——————————————————————————————————- டாக்டர்:    கஸ்டப்பட்டு காப்பாத்தினேனே பீஸ் தரலியே நோயாளி: நீங்கதானே டாக்டர் அந்த ஆண்டவன்தான் காப்பத்தணும் என்னீங்க…… ஆதனால் நான் பீஸை உண்டியல்ல போட்டிட்டன்  ——————————————————————————————————– டாக்டர்:   என்னையா உன் இதயத்திலே பாட்டுச்சத்தம் கேட்குது? நோயாளி: டாக்டர் நீங்க காதுல மாட்டியிருக்கிறது வாக்மன் ——————————————————————————————————— நோயாளி:  டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு […]

Thamizharuvi

ஆணவம் – திருமதி கவிதா தேவானந்

வசதி படைத்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது பன்னிரண்டாவது வயதில் சுனாமி என்னும் பேரலைக்குப் பெற்றோரைப் பறிகொடுத்த சிறுவர்களில் நிர்மலனும் ஒருவன். அவனது அதிர்ஷ்டம் வெளியூர் சென்றிருந்த பாட்டி சுனாமிப் பேரலைக்கு அகப்படாமல் தப்பி இருந்தார். இயற்கையின் கோரத்தால் அனாதையாக்கப்பட்ட சிறுவர்களைப் பார்க்கும் போதெல்லாம் தனக்கெனப் பாட்டியையாவது விட்ட ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக் கொள்வான். ஏல்லோரைப் போலவும் தமக்கென ஒதுக்கப்பட்ட தற்காலிக தங்கு முகாமில் இருந்தபடி பாடசாலை சென்று வந்தான். நிர்மலனுடன் கூடப்படிக்கும் மாணவன்தான் வியூரன். ஊரிலேயே வசதியான […]