பெற்றோரின் கவனத்துக்கு,
Christchurch Multicultural Council and Rotary Club of Lincoln, NZ ஆகிய இரண்டு நிறுவனங்களின் உதவியுடன் Selwyn District Council ஆனது ஒரு பல்கலாச்சார நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வில் பங்குபெற்றுமாறு எமது தமிழ் சங்கத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க எமது கலாசாலை சார்பாக இரண்டு கலை நிகழ்வுகளை வழங்க நாம் சம்மதம் தெரிவித்துள்ளோம். இதற்காக எமது கலாசாலை மாணவர்கள் தற்போது நவராத்திரி விழாவுக்காக வழங்க உள்ள இரண்டு நிகழ்வுகளை Selwyn District Council ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்கலாச்சார நிகழ்வுகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம்
அந்நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :
1.0 மாணவர்களின் காவடி நடனம்
2.0 மாணவிகளின் கோலாட்டம்
அதேநேரம் உங்களது பிள்ளைகள் இந்நிகழ்வில் பங்குபெற வேண்டாம் என்று எண்ணினால் இதுபற்றி எமக்கு அறியத்தரவும் .
இந்நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்கள்:
Date :Sunday 29 September
Time: From 10:00am – 4:00pm
Venue: Lincoln Event Centre and Domain
இந்நிகழ்வானது மேலும் சிறப்பாக நடைபெற உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பை நாடி நிற்கிறோம். இதன் அடிப்படையில்:
1. எம்மால் வழங்கப்படவுள்ள இந்நிகழ்வானது உயர்தரம் உடையதாக இருக்கவேண்டும்
2. பெற்றோர் போதியளவு பயிற்சிகளை தமது பிள்ளைகளுக்கு வீட்டில் வழங்கவேண்டும்
3. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் அறிவுரைக்கு ஏற்ப பொருத்தமான உடைகள் அணியவேண்டும்
4. பயிற்சியில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இந்நிகழ்வுக்கு சமுகம் அளிக்கவேண்டும்
5. ஒத்திகைகள் நடைபெறும் நாட்களில் தவறாது பங்கு பெற்றவேண்டும்.
6. காவடி நடனம் பயிலும் மாணவர்களின் பயிற்சிக்கு பொருத்தமான உபகரணங்களை (குடை, தடி) கொடுத்து அனுப்பவும்
இவை பற்றிய மேலதிக விபரங்கள் தேவையெனில் என்னை தொடர்பு கொள்ளவும்
Regards
Thayakaran Sandirasegary
Educational Coordinator